அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்கள் குறித்த பல்வேறு மனதை உருக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க உதவும் கருப்பு பெட்டியை சற்றுமுன்னர் அதிகாரிகள் அடையாளம் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஞ்சின் சத்தம், பைலட் அறையின் குரல்களை கருப்பு பெட்டி பதிவு செய்யும். 200-க்கும் மேற்பட்டவர்களை கொன்ற இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை விரைவில் கண்டறியலாம்.