இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய 8 இடங்களுக்கு இன்று (மே 13) ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக X தளத்தில் விமான நிறுவனம் பதிவிடப்பட்டுள்ளது. இதேபோல் இண்டிகோ நிறுவனமும் ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்களுக்கு இன்று (மே 13) விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.