தாய்லாந்து புகேட் தீவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI 379), வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று (ஜூன் 13) அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 156 பயணிகள் இருந்தநிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானம் காலை 9:30 மணிக்கு புறப்பட்டு, அந்தமான் கடல் பகுதியில் சுற்றிவந்து புகேட்டில் மீண்டும் தரை இறங்கியது. ஆரம்ப கட்ட விசாரணையில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.