குஜராத்: அகமதாபாத்தில் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு, 10 மாதங்களாக எச்.ஐ.வி பாசிட்டிவ் நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவில் கடத்திய சிறுமியை சூரத், ஔரங்காபாத், பீட், ஹைதராபாத், நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு மாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளார். இதற்கு முன்பு அவர் 6 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.