பாஜகவின் கண்ட்ரோலில் அதிமுக - மு.க.ஸ்டாலின்

80பார்த்தது
பாஜகவின் கண்ட்ரோலில் அதிமுக - மு.க.ஸ்டாலின்
ஒட்டுமொத்த பாஜகவின் கண்ட்ரோலில் அதிமுக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், "கூட்டணியை அமித் ஷா அறிவித்த போது இபிஎஸ் ஒரு வார்த்தை கூட பேசாமல் பவ்யமாக உட்கார்ந்திருந்தார். சசிகலா அவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் இபிஎஸ் துடிக்கிறார்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி