நாடாளுமன்றத்தில் சுரங்க சட்டத் திருத்தத்திற்கு திமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டை முன்வைத்தார். ஆனால், 2023ம் ஆண்டு மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்தத்தை ஆதரித்து அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசியிருந்தார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.