பரபரப்பான
அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கூடியது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் கறம்பக்குடி மருத்துவமனை குறித்த அமைச்சர் பதிலுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் வெறுமனே பெயர் பலகை மட்டுமே மாற்றப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எந்த மருத்துவமனையில் அவ்வாறு செய்யப்பட்டது என்று கூறினால்
விவாதம் நடத்த தயார் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கேள்வி நேரத்தில்
அரசியல் ரீதியாக குற்றம் சாட்டக் கூடாது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாதம் வைத்துள்ளார்.