ராணுவ வீரர்களுக்காக அதிமுகவினர் வழிபாடு

60பார்த்தது
ராணுவ வீரர்களுக்காக அதிமுகவினர் வழிபாடு
புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில், இந்திய எல்லையில் போராடும் ராணுவ வீரர்கள் நலன் பெற வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி