மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியில் மார்க்கெட் அருகே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த சமுதாயக் கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். முன்னதாக இந்நிகழ்வுக்கு சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை திமுக கட்சியினர் வரவேற்றனர். அப்போது அங்கிருந்த அதிமுக மற்றும் அமமுக கட்சி நிர்வாகிகள், “அம்மா இருக்கும்போது கூட இதை செய்யல, நீங்க செஞ்சு கொடுத்து இருக்கீங்க, ரொம்ப நன்றி” என்றனர்.