சேலம்: பைனான்ஸ் ஊழியர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல் நடத்தும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஊழியருக்கும், மேச்சேரி அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் ராஜாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உருட்டு கட்டையுடன் அதிமுக பிரமுகர் அடியாட்களை இறக்கினார். இதனால், பதறிப்போன அந்நபர், காரில் அமர்ந்தபடி நடந்தவற்றை வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது, அதிமுக பிரமுகர் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.