அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜன., 11) நடைபெறவுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் கூட்டம் நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், வேட்பாளர் தேர்வு பற்றியும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதில், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். இடைத்தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.