கொடைக்கானலில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஜூன் 8) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பாஜக விரித்த வலையில் அதிமுக மட்டுமே சிக்கியிருக்கிறது. வேறு கட்சிகள் சிக்கவில்லை. கூட்டணி ஆட்சி இன்னும் தமிழ்நாட்டில் கனியவில்லை. அதற்காக அந்த முடிவை நாங்கள் கைவிட போவதில்லை. கூட்டணியில் எத்தனை இடங்கள் பெறுவதென்பதை சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்போம்" என தெரிவித்துள்ளார்.