2024 மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமகவுடன் அதிமுக, பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மொத்தம் 8 மக்களவை தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை பாமக கேட்டு வருவதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பாமக எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்திருந்தனர்.
மேலும், சமீப காலமாக 4 முறை எடப்பாடி பழனிசாமியுடன், பாமக எம்எல்ஏ ஒருவர் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல், பாஜகவும் ஒருபுறம் பாமக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.