பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. தமிழ்நாடு
பாஜக தலைவர்
அண்ணாமலை,
பாஜக தலைவர்
பதவி வெங்காயம் மாதிரி என பேசியிருந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நீங்கள் நினைத்தபடியே அதிமுக நடந்து கொண்டது என்று தொண்டர்களிடையே பேசினார். தமிழ்நாடு
பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுகவுடன்
பாஜக கூட்டணி தொடர்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது என்றார். இந்நிலையில், தமிழ்நாட்டு டீக்கடைகளில் மற்றும் சலூன் கடைகளில் அதிமுக -
பாஜக கூட்டணி உண்மையிலேயே உடைந்துள்ளதா? இல்லை வெற்று
அரசியல் நாடகமா என்பது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.