கடந்த ஜூன் 12இல் அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானதில் பயணிகள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒரு வாரமாக ஏர் இந்தியா விமானங்களில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வருகை பதிவேடு, பணி பதிவேடு, செயல்பாட்டு அறிக்கையில் பல விதிமீறல்கள் நடந்தது தெரியவந்துள்ளது. 3 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க ஏர் இந்தியாவுக்கு DGCA உத்தரவிட்டுள்ளது.