“விவசாயிகள் தனி அடையாள எண் பெற, உரிய ஆவணங்களை வரும், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என, வேளாண் துறை கெடு விதித்துள்ளது. நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, ஆதார் எண் போல, தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசின், வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட, விவசாயிகள் பதிவு, நிலம், பயிர் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே, வரும் காலங்களில், மத்திய அரசு திட்டங்களின் கீழ் மானிய உதவிகள் வழங்கப்படும்.