தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச். 14) தாக்கல் செய்தார். தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (மார்ச். 15) தாக்கல் செய்கிறார். இதை தொடர்ந்து பன்னீர்செல்வம் மட்டுமின்றி பல திமுக எம்.எல்.ஏ-க்கள் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.