பிரதான் மந்திரி பாரதிய ஜன ஔஷதி பரியோஜனா திட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்தார். இதன் மூலம் இதுவரை 28 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் சேமித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜன ஔஷதி கேந்திரங்கள் மூலம் 1,965 வகையான மருந்துகளும், 235 வகையான மருத்துவ சாதனங்களும் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.