கோயம்புத்தூர் மாவட்டத்தில் சி.எம்.ஐ.எஸ் தனியார் பள்ளி மற்றும் துபாயின் லேப் ஆஃப் தி ஃப்யூச்சர் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை மற்றும் கண்காட்சியை நடத்தினர். இந்நிகழ்வில், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முறை, ரோபாட்டிக்ஸ், ஏரோமாடலிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 6 நாட்கள் பயிற்சி பட்டறையின் போது பல்வேறு தகவல்களை மாணவர்கள் அறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.