எல்.முருகன் மீதான முரசொலியின் அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

60பார்த்தது
எல்.முருகன் மீதான முரசொலியின் அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீது முரசொலி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின்னர் வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முரசொலி நிறுவனம் உள்ள இடம் பஞ்சமி நிலம் எனக் கூறியதால் எல்.முருகன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியது.

எல்.முருகன் இந்தமுறை நீலகிரி (தனி) தொகுதியில் பாஜக சார்பில் களம்கண்டுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிட்டார். வரும் ஜுன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

தொடர்புடைய செய்தி