'லியோ' படத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

33586பார்த்தது
'லியோ' படத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 'லியோ' படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். வன்முறை காட்சிகள் நிறைந்த லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வன்முறை, ஆயுத கலாச்சாரம், போதை பொருள் பயன்பாடு உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.