வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

53பார்த்தது
வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) மற்றும் சென்னை எழும்பூர் காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) ஆகியவற்றில் மே 11-ம் தேதி முதல் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களிலும் முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று குறைக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி