தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு 25,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தோம். 17,100 மெட்ரிக் டன் அளவு கோதுமை வழங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் இனி கூடுதல் கோதுமை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றார்.