புனே அருகே உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஆன்லைன் விளையாற்றிக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சிறுவன் திடீரென தான் வசிக்கும் குடியிருப்பு கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். இதனையடுத்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் தற்கொலை குறிப்பு ஒன்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.