பஞ்சாப் மாநில திரைப்பட நடிகை தான்யாவின் தந்தையை, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுள்ளது. மருத்துவரான அவரை நோயாளிகள் போல் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவில் வசிக்கும் பயங்கரவாதி லக்பீர் சிங் லாண்டாவிடம் இருந்து, அவருக்கு மிரட்டல் அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. மார்பில் சுடப்பட்டதில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.