உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்யாராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டுள்ள நடிகை சம்யுக்தா மேனன், கங்கையில் புனித நீராடினார். கங்கையில் புனித நீராடும் படத்தைப் பகிர்ந்துள்ள நடிகை, ஒரு பரந்த கலாச்சாரத்தைப் எண்ணி பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு வெளியான 'பாப்கார்ன்' படத்தின் மூலம் நடிகையாக மலையாளத்தில் அறிமுகமான சம்யுக்தா, தமிழில் களரி, வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.