இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும்
போர் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. அங்கு சிக்கிய பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா பத்திரமாக
இந்தியா வந்தடைந்தார். இன்று பிற்பகலில் அவர் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கினார். ஆனால் அவர் அங்கு உள்ளூர் ஊடகப் பிரதிநிதிகளால் சூழப்பட்டார். அவரிடம் கேள்வியெழுப்பிய போதும், செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார்.