நடிகை நிமிஷா சஜயனின் தந்தை காலமானார்

69பார்த்தது
நடிகை நிமிஷா சஜயனின் தந்தை காலமானார்
பிரபல நடிகை நிமிஷா சஜயனின் தந்தை சஜயன் நாயர் (63) காலமானார். இவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் மேற்கு பகுதியில் வசித்து வந்தார். சஜயன் நாயர் கேரளாவின் கொல்லம் மாவட்டம் கடக்கலைச் சேர்ந்தவர். அவருக்கு மனைவி பிந்து சஜயன் மற்றும் நடிகை நிமிஷா சஜயன், நீத்து என இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை நிமிஷா, தமிழில் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்,
மிஷன் சாப்டர் 1 படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி