தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சினிமாவை விட்டு கீர்த்தி சுரேஷ் விலக முடிவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களை முடித்த பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுவதுமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.