இன்று (பிப். 04) உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து அந்நோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகை கெளதமி வெளியிட்ட பதிவில், "புற்றுநோயை குணப்படுத்த முடியும். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க முடியும், புற்றுநோயை தவிர்க்க முடியும். ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொண்டு நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், வாருங்கள்! புற்றுநோயில்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்” என்றார்.