தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு அளித்த புகாரின் பேரில் நடிகர் சிங்கமுத்து மீது காவல் துறையினர் தொடர்ந்த நில மோசடி வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று (பிப். 03) மீண்டும் விசாரணைக்கு வந்த போது வடிவேலு நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். விசாரணைக்கு பின்னர் வழக்கை மார்ச் மாதம் 1-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.