போதைப் பொருட்களை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையில் நீதிபதி முன்னால் அவர் பேசும் போது, "நான் யாருக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்யவில்லை, நான் மட்டுமே பயன்படுத்தினேன். என் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பை வழங்குவேன்" என கூறினார்.