ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, மதயானைக்கூட்டம், ராவணக்கோட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வழங்கி மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்ட இயக்குனர் விக்ரம் சுகுமாரன். நேற்று (ஜூன் 1) தனது 43 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக மறைந்தார். இந்நிலையில், மதுரவாயலில் உள்ள சுகுமாரனின் வீட்டுக்கு நேரில் வந்த நடிகர் சாந்தனு தனது அஞ்சலியை செலுத்தினார். நடிகர் சாந்தனு ராவணக்கோட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.