ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் ரவி மோகன் தொடங்கியுள்ளார். இதற்கான லோகோவை வெளியிட்டுள்ள அவர், விரைவில் தான் தயாரிக்க உள்ள திரைப்படங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார். சிங்கம், பிறை நிலா வடிவம் கொண்ட புதிய லோகோவுடன் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என இடம்பெற்றுள்ளது. தனது மனைவி ஆர்த்தியை பிரிந்த ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.