நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடினர். இன்று (ஜன. 18) சமரச தீர்வு மையத்தில் மத்தியஸ்தர் முன்னிலையில் இருவரும் ஆஜராகி பேசினார்கள். இதனை தொடர்ந்து, சமரச பேச்சு முடிந்தபின்னர் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிமன்றம் இது தொடர்பான விசாரணையை பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.