பிரபல இளம் ஒளிப்பதிவாளர் கே.ஆர். கிருஷ்ணா( 30) நெஞ்சு வலி காரணமாக நேற்று (டிச.30) காலமானார். தனது 20 வயதிலேயே ஒளிப்பதிவு பயின்ற இவர், 'மனோஹரம்' படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தற்போது நானி நடித்து வரும் ஹிட் 3 படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் காலமானார்.