நடிகர் மோகன்லாலின் தாய் மாமா கோபிநாதன் நாயர் தனது 93வது வயதில் காலமானார். கோபிநாதன் கேரளாவின் ஆலப்புழா மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் பொது மேலாளராவார். இன்று (ஜூன். 08) மாலை அமிர்தபுரி ஆசிரமத்தில் அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த கோபிநாதனுக்கு ராதா பாய் என்ற மனைவியும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர். மாதா அமிர்தானந்தமயியின் தீவிர சீடராக கோபிநாதன் இருந்தார்.