பிரச்சாரத்தின் போது நடிகர் மாரடைப்பால் மரணம்

61பார்த்தது
பிரச்சாரத்தின் போது நடிகர் மாரடைப்பால் மரணம்
சட்டீஸ்கர்: பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகர் ராஜேஷ் அவஸ்தி (42) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், நடிகருமான ராஜேஷ் அவஸ்தி, கரியாபந்தில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், ராஜேஷ் அவஸ்தி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி