நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆஜராக உத்தரவு

363பார்த்தது
நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆஜராக உத்தரவு
ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக, நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ரூ.500 கோடியை துபாயில் பதுக்கி வைத்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், இண்டர்போல் உதவியுடன் துபாயில் பதுங்கியுள்ள இயக்குநர்களை பிடிக்க குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மோசடி பணத்தில் வாங்கிய பல கோடி ரூபாய் மதிப்பிலான 127 சொத்துகளில் 60 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி