சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நடிகரும், அதிமுகவை சேர்ந்தவருமான அஜய் வாண்டையார் மற்றும் சுனாமி சேதுபதி ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் தனியார் பாரில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோசடி, அடிதடி வழக்கின் அடிப்படையில் குண்டர் சட்டம் பாய்ந்தது. அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாந்தையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.