கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள அன்னகூடம், பசுமட காப்பகம் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழக்கு விழா கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது கோயில் அருகே கட்டப்பட்ட தர்ப்பண மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. கோயிலின் பெயரைக் கூறி நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.