ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை ஒரே நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். "ஒவ்வொரு மாதமும், 15ம் தேதி முதல் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்று சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.