கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் ஷா மீது இன்று மாலைக்குள் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை டிஜிபிக்கு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.