அண்ணன், தங்கை மீது ஆசிட் வீச்சு.. பகீர் காட்சி!

57பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பட்டப்பகலில் பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசிட் வீசியதில் 21 வயதுடைய பெண்ணும் அவரது அண்ணனும் காயமடைந்துள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். அண்ணனுடன் சாலையோரம் பெண் நின்றிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென ஆசிட் வீசி தாக்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையர் துர்கேஷ் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி