படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து.. நடிகர்கள் காயம்

83பார்த்தது
படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து.. நடிகர்கள் காயம்
பாலிவுட் நடிகர்கள் அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி, மற்றும் முடாசர் அஜீஸ் ஆகியோர் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் காயமடைந்தனர். 'மேரே ஹஸ்பண்ட் கி பிவி' படத்திற்காக, ​​ராயல் பாம்ஸில் உள்ள இம்பீரியல் அரண்மனையில் பாடல் காட்சி எடுக்க அமைக்கப்பட்ட செட் கூரை இடிந்து அவர்கள் மீது விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக நடிகர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றுமேற்கு இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு தலைவர் பி.என். திவாரி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி