ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் அதிக கொழுப்பு நிறைந்தது. இது லிட்டர் ரூ.60-க்கு விற்கப்படுகிறது. பால் அட்டை வைத்திருப்போருக்கு, ரூ.46-க்கு வழங்கப்படுகிறது. உயர் அலுவலர்கள், அமைச்சர்கள் சிபாரிசு இருந்தால் மட்டுமே, அதிகாரிகள் அட்டை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள அதிகாரிகள் "ஆரஞ்சு நிற பால் அட்டையை, சிலர் தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் விசாரித்த பிறகு வழங்குகிறோம். சிபாரிசு செய்யவில்லை” என்றனர்