தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், பாலகங்களில் பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றுடன் ஐஸ்க்ரீமையும் விற்று வருகிறது. இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின், நாளை (டிச.25) முதல் 31ஆம் தேதி வரை குறிப்பிட்ட சில ஐஸ்க்ரீம் விலையை 10% தள்ளுபடி அறிவித்துள்ளது. இதேபோல், புதிதாக ஆவின் பாலகங்கள் வைக்க விரும்புவோர் உடனே விண்ணப்பிக்கும்படியும் ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.