அவதூறு பதிவுகளை நீக்கக் கோரி ஆர்த்தி ரவி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது வக்கீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊடகங்கள், மீடியா உள்ளிட்ட ஆன்லைன் பயனர்கள் யாராக இருந்தாலும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி, ஆர்த்தியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமண விவகாரம் தொடர்பாக எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருந்தாலும் அதை உடனடியாக நீக்க வேண்டும். தொடர்ந்து அப்படி ஏதேனும் வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.