டெல்லியில் பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமனத்துல்லா கானின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் தொடர்பான இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி ஏசிபி மற்றும் சிபிஐ வக்பு வாரியம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னணியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி
சஞ்சய் சிங் மதுபான ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.