ஒடிசா: ரூர்கேலாவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 25 வயது இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். திருமண பேச்சை அப்பெண் எடுத்த போதெல்லாம் அதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இளம்பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், அந்த இளைஞர் கம்பி நீட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த இளம்பெண்ணின் தாயார் போலீஸில் புகாரளித்ததையடுத்து, இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.